vijay tvk party Advisory meeting held in chennai

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார்.

Advertisment

அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்டிருந்தனர். இதற்காக செப்டம்பர் 23ஆம் தேதி காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாநாடு தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் மீண்டும் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு மற்றும் நிபந்தனைகளில் சில தளர்வுகள் அளிக்க வேண்டும் என த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டார். அதனால் 33 நிபந்தனைகளில், கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்தது.

Advertisment

இதையடுத்து மாநாட்டிற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சமீபத்தில் சில அறிவுரைகளை வழங்கினார் ஆனந்த். இந்த நிலையில் மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தின் தலைமையில் தற்போது கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்று வருகிறது. இதில் மாநாடு ஏற்பாடுகளை செய்வதற்கான குழுக்கள் அமைப்பது மற்றும் அதில் நிர்வாகிகளை தேர்வு செய்து அதற்கான பணிகளை எவ்வாறு பார்த்து கொள்வது, பின்பு மக்களை மாநாட்டிற்கு அழைத்து வர நியமிக்கப்பிட்டஇரண்டு பெண் நிர்வாகிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு எவ்வாறு மக்களை அழைத்து வர வேண்டும் என ஆலோசிக்கின்றனர். இதையடுத்து அடுத்த மாதம் தொடக்கத்தில் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற த.வெ.க.-வினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.