Advertisment

தமிழ்நாட்டில் ஏழு நகரங்களில் விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம்

 Vijay TV Navratri celebrations in seven cities in Tamil Nadu

Advertisment

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது.

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்துகலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர்.திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம்.அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் 2023 நேற்று முதலாவதாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Advertisment

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் இன்று (16 அக்டோபர் 2023), ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023 திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023, தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023, மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision க்கு #VijayGoluContest- எனும்hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யும்படியும் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

vijay tv
இதையும் படியுங்கள்
Subscribe