Advertisment

தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் உதவித் தொகை அளித்த விஜய் டிவி!

vijay tv

கரோனா பாதிப்பால்துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாகசின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகிய துறைகளில்பணிபுரியும் தொழிலாளர்கள்கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். புது நாடகங்கள் எதுவும் ஒளிபரப்பு செய்யமுடியாததால், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் விஜய் டிவி தனதுபணியாளர்களின் நலனைகருத்தில்கொண்டு ரூ.75 லட்சம் உதவி தொகையை வழங்கியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின்சிலதொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளரும் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களின் எழுத்தாளருமான ரமணகிரிவாசன், இது குறித்துதனதுபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், "கரோனா பிரச்சனையில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பணிகளில் ஒன்று தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் தயாரிப்பு. புதிய தொடர்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியாமல் சேனல்கள் முடங்கியுள்ளன. விளம்பர வருவாய் இன்றி சேனல்கள் நஷ்டத்தைசந்தித்துள்ளன.

Advertisment

விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த பெப்சி யூனியனின் பல துறைகளை சேர்ந்த 750 பேருக்கும்ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய செய்ய இயலாமல் போனது. அவர்கள் அனைவருமே தினசரி வருமானக்காரர்கள். அந்த 750 பேருக்கும் ஏறக்குறைய 75 லட்ச ரூபாயை விஜய் டிவி உதவித்தொகையாக வழங்கி இருக்கிறது. இது ஏறக்குறைய அவர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்து இருந்தால் என்ன வருமானம் கிடைத்திருக்குமோ அதற்கு சமமான தொகை என்றால் அது மிகையில்லை.

தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்தத் தொகையை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்தபணம் போய் சேருகிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்திருக்கிறது. விஜய் டிவியில் இரண்டு தொலைக்காட்சி தொடர்களைதயாரித்துக் கொண்டிருப்பவன் நான். உதவி பெற்ற ஒவ்வொருவரும் அந்தபணத்தை நாங்கள் வழங்கியதாக எண்ணி தொலைபேசியில் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அந்த நன்றி விஜய் டிவிக்கே போய்சேர வேண்டும். அவர்கள் இந்த உதவியைசெய்ததை கூட விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. நன்றி எப்போதும் சரியான இடத்திற்குப் போய்சேரவேண்டும் என்பதால்தான் இந்தப் பதிவு. மனிதநேயத்துடன் இந்த மாபெரும் உதவியைச் செய்த விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் விஜய் டிவி என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் பிரச்சனையான சூழலில் நிஜமாகவே தொழிலாளர்கள் பக்கம் நின்று, எங்கள் விஜய் டிவியாக அனைவரது இதயத்திலும் உயர்ந்து நிற்கிறது. இந்த மாபெரும் உதவிக்குபின்னால் மறைந்து இருக்கும் மனிதநேயம் மிக்க விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டிக்கும், சீனியர் வைஸ் பிரஸிடெண்ட் பாலசந்திரனுக்கும், தலைமை நிகழ்ச்சிபொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பல விஜய் டிவிநிகழ்ச்சிகளை தயாரித்தகுளோபல்வில்லேஜர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் தனது சமூகவலைதள பக்கத்தில் விஜய் டிவியின் இந்த உதவியைபாராட்டியுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe