Skip to main content

''அந்த அக்கவுண்ட் என்னுடையது இல்லை..!'' - 'கைதி' தீனா விளக்கம்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

grg

 

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படங்களை வெளியிட படக்குழுவினர் வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'விஜய்' நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் அதில் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறது.
 

 

இந்நிலையில் 'கைதி' படத்தைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த தீனா இப்படம் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியான ட்விட்டர் கணக்கு தன்னுடையது அல்ல என நடிகர் தீனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்... "இந்த ட்விட்டர் கணக்கு போலியானது. தயவுசெய்து ரிப்போர்ட் செய்யுங்கள். எனக்கே தெரியாத அப்டேட் எல்லாம் கொடுக்கிறாரு. ஃபேக் ஐடி உருவாக்குவதில் என்ன பயன் என்று தெரியவில்லை. ஒரிஜினல் கணக்கிற்கு 9 ஆயிரம் ஃபாலோயர்கள், போலி கணக்கிற்கு 17 ஆயிரம் ஃபாலோயர்கள்" என விளக்கமளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ்டரை போன்று ‘வாத்தி’க்கு வந்த சிக்கல் - முதல்வரிடம் கோரிக்கை

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

vaathi movie title issue

 

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

 

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இதனிடையே ஒன் லைஃப் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார்.  

 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாத்தி என்ற தலைப்பு ஆசிரியர்களை அவமதிக்கும் சொல்லாக இருக்கிறது. உடனே தலைப்பை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

 

இதே போல் விஜய் ஆசிரியராக நடித்து வெளியான 'மாஸ்டர்' படத்திற்கும் தலைப்பு தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இப்படத்தின் தலைப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, ‘தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களைத் தனது படங்களில் தலைப்பாக வைப்பதன் மர்மம் என்னவோ’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

IT raid on the producer xavier britto house

 

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். செல்ஃபோன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=tsybx8EILmw

 

இந்தியாவில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட செல்ஃபோன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள செல்ஃபோன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் நேற்றிலிருந்து (21.12.2021) சோதனை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.