/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/123_50.jpg)
பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.
இந்த சூழலில் அவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை (04.05.2023) காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக மனோபாலாவின் மகன் தெரிவித்துள்ளார். பின்பு அவரது உடல் வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். விஜய் நடித்துள்ள பிகில்,தெறி,தலைவா, துப்பாக்கி, நண்பன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் மனோபாலா நடித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)