Advertisment

'உனக்கு இது புரிஞ்சிட்டா நீ தான் எமனடா ' - போட்டிக்கு தயாராகும் விஜய் தேவரகொண்டா

Vijay Thevarakonda's 'the liger hunt theme' lyrical teaser released

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 'லைகர்' படத்தின் 'தி லைகர் ஹண்ட் தீம்' பாடல் வீடியோவின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. குத்துச்சண்டை இறுதி போட்டியில் சண்டையிட, தன் உடலை தயார்படுத்துவதற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது போல் வெளிவந்திருக்கும் இந்த பாடலின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாட்டின் முழு லிரிக்கல் வீடியோ எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisment

liger vijay devarakonda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe