JGM

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகநாத் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ஜே.ஜி.எம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்தாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Advertisment