படப்பிடிப்பு தளத்தில் விஜய்! - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்! 

bvsdbs

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது.

ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் நேற்று முன்தினம் ஜார்ஜியா சென்றார். இவர் ஜார்ஜியா செல்லும் புகைப்படம் வைரலாகி வந்த நிலையில், ஜார்ஜியாவில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில்விஜய் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

thalapathy 65
இதையும் படியுங்கள்
Subscribe