Advertisment

“நீ என்னடா பண்ணுற என் பக்கத்துல” - ஷாமை கலாய்த்த விஜய்

Vijay teasing Shyam memories

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் விஜய்யுடன் முதன்முதலில் நடித்தது பற்றியும், நடிகர் சங்கக் குழுப்புகைப்படம் பற்றி பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள்பின்வருமாறு...

Advertisment

மலேசியாவிலிருந்து நடிகர் சங்கக் கலைநிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் போய்க்கொண்டிருந்தோம். அப்போது பிளைட் ஏறும் முன் பஸ்ஸில் பார்த்த போது ஹாய் விஜய் அண்ணா என்றதும், ஹாய் என்று சாதாரணமாக இருந்துவிட்டார். அவரிடம் அவ்வளவு தான் ரியாக்சனே வரும். அதற்கப்புறம் இந்தக் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அவர் பக்கத்தில் போய் நின்று இந்த போட்டோவைக் காட்டினேன். பயங்கரமான மெமரீஸ்ல என்றவர், அருகில் நிற்கும்என்னைப் பார்த்து, நீ என்னடா பண்ணுற, என் பக்கத்துல என்று கலாய்த்தபடியே கேட்டார். ஆமாம் நான் உங்க பக்கத்துல தான் நின்றேன் என்றதும் வியந்தார்.

Advertisment

குஷி படத்தில் விஜய் நண்பர்களாக நடிக்க பலர் கூடி நின்றபோதும் அருகே நான் நின்று நடிக்கும் வாய்ப்பு மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவால் கிடைத்தது. அதன் பிறகு 12பி படத்தில்எங்கே வாய்ப்பு கேட்டு நின்றேனோ அதே இடத்தில் ஹீரோவாக முதல் ஷாட் எனக்கு வைத்தார்கள். அப்போதெல்லாம் விஜய் அண்ணாவை பெயரைச் சொல்லித்தான் கூப்டுவேன். என்ன விஜய் நீங்கதான் அடுத்த சூப்பர்ஸ்டாராமே என்றதும் கிண்டலாக புருவம் உயர்த்தி என்ன சொன்ன என்று கிண்டலாகக் கேட்டுவைப்பார்.

actor vijay shyam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe