Skip to main content

அஜித்துக்கு பாடல் எழுதும் விஜய்...

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ஹிந்திப் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்று அஜித்தை வைத்து ரீ-மேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீதேவியின் போனி கபூர். எச்.வினோத் இதை இயக்குகிறார்.
 

nerkonda parvai


வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 

இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மூன்று பாடல்களை பா.விஜய் எழுதுகிறார். அதில் ஒரு பாடலை எழுதி முடித்துவிட்டார் பா.விஜய். அஜித்துக்கும் விதய பாலனுக்கும் இடையேயான காதல் பாடலாக அமைந்திருக்கிறதாம்.
 

2013ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் அனைத்து பாடல்களையும் பா.விஜய் தான் எழுதினாராம். அதன் பின் தற்போதுதான் இந்த கூட்டணி சேர்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகள் விசயத்தில் ‘விஸ்வாசம்’ கேரக்டர் தான்; அஜித்தை புகழ்ந்து தள்ளிய அபிராமி வெங்கடாசலம்!

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

 Abhirami venkatachalam interview

 

‘இரு துருவம்’ வெப் சீரிஸில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலம் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்; அப்போது அவர் பல சர்ச்சையான விசயங்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.

 

'இரு துருவம்' வெப் சீரிஸ் குறித்த அனுபவங்கள்?

நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கு முன்பே இரு துருவம் வெப் சீரிசில் கமிட்டானேன். அதுதான் என்னுடைய கரியர் தொடங்கிய நேரம். நல்ல ஒரு கிரைம் திரில்லர் அது. முதல் சீசனில் எப்படியாவது நான் செலக்ட் ஆகிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம்.

 

நிஜமான அபிராமியை எப்போதாவது மிஸ் செய்கிறீர்களா?

நான் மனதளவில் பலமான ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. நிச்சயம் பல விஷயங்களில் நான் மாறியிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவை அனைத்துமே வளர்ச்சியாகத் தான் தெரிகின்றன.

 

இந்த இன்டர்நெட் உலகில் நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அதை வளர்ச்சிக்கான அடிப்படையாகத் தான் பார்க்கிறேன். அடிப்படையில் எனக்கு ஜனநாயகம் பிடிக்கும். இங்கு உரையாடல் அவசியம். எனவே மனதுக்குத் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை. சிவராத்திரியில் நடனமாடியது, டாட்டூ குத்தியது எல்லாம் சர்ச்சையாகின. ஆனால் அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நம்மால் மூச்சுவிடக் கூட முடியாது. சிவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக என்னால் வாழ முடியாது.

 

இந்தக் காலத்தில் உறவுகள் எப்படி மதிப்பிடப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

அனைத்து உறவுகளுமே இங்கு முக்கியம் தான். அவர்கள் தான் நம்முடைய வாழ்க்கையை அழகாக்குகின்றனர். நண்பர்களுக்காக நான் எதையும் செய்வேன். என்னுடைய அம்மா தான் எனக்கு எல்லாமே. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று உண்மையில் விரும்பிய ஒரு இதயம் என்னுடைய பாட்டி. 'ரட்சகன்' படத்தில் வரும் சுஷ்மிதா சென் கேரக்டர் தான் நிஜ வாழ்க்கையில் நான். எனக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நெகட்டிவ் மனிதர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. 

 

நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும்போது அஜித்திடம் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?

அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அஜித் சார் மிகவும் எளிமையானவர். அமைதியானவர். அனைவரையும் மதிக்கக் கூடியவர். எல்லோருடனும் சமமாகப் பழகுவார். அவருடைய மகள் மீது அவர் கொண்டுள்ள அன்பு என்னை வியக்க வைத்தது. 'விஸ்வாசம்' படத்தில் நடித்த கேரக்டர் போல் தான் நிஜ வாழ்க்கையிலும் அவர் தன் மகள் மீது அன்பு செலுத்துகிறார். அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் அது.

 

 

Next Story

வலிமை படத்தகவல் -அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்... 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020
ajith

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர்  எச். வினோத், இதற்கு முன்பு 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர். அவரின் கதை மற்றும் திரைக்கதைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அஜித்தை வைத்து ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியிருந்தாலும் அது ரீமேக் செய்யப்பட்ட  படம் என்பதால், எச்.வினோத்தின் கதை மற்றும் திரைக்கதையில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

 

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவலால், படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்புகளை  நடத்த அரசு அனுமதியளித்ததும், இப்படத்தின்  படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது 'வலிமை' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

 

இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ். என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவலை தற்போது அஜித் ரசிகர்கள், ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து  கொண்டாடி வருகின்றனர்.