Advertisment

படப்பிடிப்பு தளத்தில் விஜய் சூர்யா சந்திப்பு!

Advertisment

vijay surya meets at shooting spot

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு தற்போது சென்னையில் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

Advertisment

இதனிடையே பாண்டியராஜ்இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமேதயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகநடிக்கிறார். சத்யராஜ், சூரி, உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு இறுதி கட்ட படப்பிடிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவில் நடத்தியது.

இந்நிலையில் இரு படங்களின் படப்பிடிப்பும்ஒரே இடத்தில் நடைபெற்றதால்இடைவேளையின் போது விஜய் மற்றும் சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது.

actor surya actor vijay Beast Etharkkum Thunindhavan
இதையும் படியுங்கள்
Subscribe