‘கோட்’ படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்; அறிவித்த யுவன் ஷங்கர் ராஜா

vijay sung a song in goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’.ச்விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், "அஸ்கு லஸ்கா, கூகுள் கூகுள், செல்பி புள்ள பாடலுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் விஜய் பாடியவை. அதே படங்களில் மற்ற பாடல்களையும் எழுதிய மதன் கார்க்கி விஜய் பாடிய பாடல்களை மட்டும் குறிப்பிட்டிருந்ததால், இந்த படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடுவதாக யூகிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த இசை நிகழ்ச்சியில் விஜய், தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் பாடியுள்ளதாக வந்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது. முதல் முறையாக யுவன் இசையில் பாடுகிறார் விஜய் என்பது குறிப்பிடதக்கது.

actor vijay The Greatest of All Time yuvan shankar raja
இதையும் படியுங்கள்
Subscribe