Advertisment

'அடிப்படை சட்டம் அனைவருக்கும் அவசியம்' - விஜய்யின் அடுத்த முன்னெடுப்பு

vijay started free legal advice centre

Advertisment

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது.

இதையடுத்து மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண் நிர்வாகிகளுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். இதனிடையே பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' என்ற இரவு பாடசாலை திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த முன்னெடுப்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் முதற்கட்டமாக சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe