Advertisment

இந்திய சினிமாவில் இதுதான் முதன்முறை; உலகளவில் சாதனை படைத்த 'அரபிக் குத்து'

vijay starring beast movie arabic kuthu song enters global top 200 chart

Advertisment

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி வெளியான 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல சாதனைகளை படைத்துள்ள இப்பாடல் தற்போது வரை யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஸ்பாட்டிஃபை செயலியில்அரபிக் குத்து பாடல் வெளியான 48 மணி நேரத்தில் உலகளாவிய ட்ரெண்டிங் அட்டவணையில் முதல் 200 இடத்தில் 126 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த உலகளாவிய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த முதல் இந்திய பாடல் என்ற பெருமையை 'பீஸ்ட்' படத்தின் "அரபிக் குத்து" பாடல் பெற்றுள்ளது.

Advertisment

actor vijay arabic kuthu Beast
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe