Advertisment

“நான் ரெடிதான் வரவா...” - இயக்குநராக எண்ட்ரி கொடுக்கும் விஜய்யின் மகன்

vijay son to make directorial debut

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய், தற்போது லியோ பட வெளியீட்டிற்குத்தயாராகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப்படித்து வருகிறார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

Advertisment

இப்படத்தை லைகா தயாரிப்பில் உருவாக்குவதாக அந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் டைட்டில்மற்றும் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாவதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் தற்போது அவருக்கு வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். முன்னதாகஜேசன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலின் மூலம் திரையில் தோன்றினார் என்பது நினைவுகூரத்தக்கது.

actor vijay jason sanjay lyca
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe