Advertisment

விஜய் மீது காலணி வீச்சு - போலீசில் பரபரப்பு புகார்

vijay slipper throw issue

Advertisment

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடல் கடந்த 28ஆம் தேதி, சென்னை தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில் ரஜினி, கமல், இளையராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்விஜய்யும், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது, கூட்டத்திலிருந்து அவர் மேல் காலணி வீசப்பட்டது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்த நிலையில் விஜய் மீது காலணி வீச்சு நடந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

vijayakanth actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe