Vijay in Siruthai Siva direction ?

விஜய், 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக உருவாகி வருகிறது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் விஜய், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது சிவாவிடம் தனக்கு ஒரு கதை எழுதுமாறு விஜய் கூறியுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அஜித், ரஜினி ஆகியோரை இயக்கியுள்ள சிவா இதன்மூலம் விரைவில் விஜய் உடனும் இணையலாம் எனத் தெரிகிறது.