Advertisment

விஜய்க்கு ஓப்பனிங் கொடுக்கும் சிவகார்த்திகேயன்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

vijay to sing the song Written by sivakarthikeyan beast movie

Advertisment

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d27081f9-5629-4073-956c-228f30406b36" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_34.jpg" />

இந்நிலையில், படத்தின் பாடல் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பீஸ்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு வரிகள் எழுத அதை நடிகர் விஜய் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய 'செல்லம்மா..' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாநடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan actor surya actor vijay Beast
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe