Advertisment

'அவை போலியானவை...' நடிகர் விஜய் தரப்பு விளக்கம்!

vijay

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தளபதி 65’ படத்தில் நடித்துவருகிறார். நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் இதுவரை அதிகாரப்பூர்வ கணக்கு கிடையாது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக கணக்கு தொடங்கப்பட்டு, சில புகைப்படங்களும் பகிரப்பட்டன. அவற்றை நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகளின் உண்மையான கணக்கு என நம்பிய ரசிகர்கள், அந்தக் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இந்த கணக்குகள் போலியானவை என்று தற்போது தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள நடிகர் விஜய் தரப்பு, ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா இருவரும் எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை என விளக்கமளித்துள்ளது.

actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe