“பூமியை போல மனுசனுக்கு இருக்கு நம்புகிறேன்..”- விஜய் சேதுபதி

vijay sethupathy

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது. மேலும், விஜய் சேதுபதி வெள்ளை தாடியுடனும், டை அடிக்காத தலைமுடியுடனும் புது கெட்டப்பில் இருக்கிறார். இது அடுத்து அவர் நடிக்கப்போகும் வெப் சீரிஸிற்கான லுக் என்றெல்லாம் இணையத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த கெட்டப் குறித்து அண்மையில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூலமாக தெரிவித்துள்ளார். அதில், “லாக்டவுனா இருக்குறதுனால டை அடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன் சார். அதான். மூஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே.

பூமியோட குணம் ஒன்னு இருக்கு சார். ஒரு புல் தரை இருக்கு. அதுல நடந்துட்டே இருந்தா பாதை வந்துடும். நடக்கமா விட்டிங்கனா திரும்ப புல் மொளச்சுடும். ரெக்கவர் ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கு இருக்கு என நான் நம்புறேன்'' என்றார்.

actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe