Advertisment

விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து...

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, சுதீப் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள். இதை நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.

Advertisment

vjs

கடந்த ஒரு மாத காலமாக சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.

சிரஞ்சீவி திரும்பியதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை திடீர் என்று படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அறியப்படாத நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Advertisment

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8e174a87-e32e-4692-bf52-c6cec4cf28e9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_6.png" />

நேற்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை சயீரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe