vijay sethupathy replaced udhayanidhi in kamal project

நடிப்பிலிருந்து விலகி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின், அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக உருவாகும் படம் 'மாமன்னன்'. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே, கமல் தயாரிக்கும் திரைப்படத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகியுள்ள நிலையில், அப்படத்திற்கான நடிகர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. உதயநிதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

முன்னதாக கமல் தயாரித்து நடித்திருந்த 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.