Skip to main content

“அதை சொன்னா செய்தி ஆக்கி பிரச்சனை பண்ணுவாங்க”- விஜய் சேதுபதி

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'சிந்துபாத்' . இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 

vijay sethupathi

 

 

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
 

இந்த படத்தை வாசன் மூவிஸ்  மற்றும் கே புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாித்துள்ளன. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, ''அருண்கிட்ட இருக்க பிளஸ் முன்னணி கதாப்பாத்திரங்களை நல்லவிதமாக காட்டுவார். பெண்களை நல்ல விதமாக  காட்டுவார். படம் என்பதையும் காட்டி என் குடும்ப நண்பனாகவும் ஆகிட்டான். அதனால் தான் என் பையன இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
 

சிந்துபாத் படம் நமக்கு முன்னாடியே தெரிஞ்ச கதை தான். அதை சொன்னா செய்தி ஆக்கி பிரச்சனை பண்ணுவாங்க. பெயர் சொல்லல. கடல் கடந்து தன் மனைவியை கடத்தி சென்று போனவனிடம் இருந்து. இவன் போய் மனைவியை மீண்டும் எப்படி கஷ்டப்பட்டு போராடி காப்பாத்துவான்கிறது தான் கதை''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார். 

Next Story

உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்காத 'ஜவான்' - டிரைலர் வெளியீடு!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Jawan | Official Tamil Trailer | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Vijay S | Deepika P | Anirudh

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் இப்படம் இந்தாண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், அண்மையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்தது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ரெட் சில்லீஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கையில், பிரமாண்ட காட்சிகளோடும் ஆக்‌ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஷாருக்கானின் ஹீரோயிசம், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம், விஜய் சேதுபதியின் வில்லனிசம், எனப் படத்திற்கு ஆர்வம் தூண்டும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.