prime video

நடிகர் விஜய் சேதுபதிக்கு 'மாஸ்டர்' படம் ரிலீஸை தொடர்ந்து வரிசையாக பல படங்கள் ரிலீஸுக்காக உள்ளன. இது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Advertisment

அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் கௌரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்த 'க.பெ. ரணசிங்கம்' படத்தின் டீஸரும் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

இதனிடையே எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'லாபம்'. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் திரையரங்கில் ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஓ.டி.டி. உரிமையை 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் வாங்கியிருப்பதாவும், திரையரங்கில் படம் ரிலீஸான பின்னரே ஓ.டி.டி.யில் ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment