Advertisment

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

vijay sethupathy, nithya menon movie '19(1)(a)' get direct release in hotstar ott

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'விக்ரம்' படம் மற்றும் கதாநாயகனாக நடித்த 'மாமனிதன்' படம் சமீபத்தில் வெளியானது. இதில் 'விக்ரம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் 'மாமனிதன்' படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisment

இந்நிலையில் மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 19(1)(a) படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

hotstar Nithya menon actor vijay sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe