நானு ரௌடிதான் படத்தில் விஜய்சேதுபதி முறைத்து பார்க்கும் ஒரு நபரை பார்த்து பயந்துபோய் ஆனந்த் ராஜ் கேட்ட பணத்தை கொண்டுவந்து கொடுப்பார். அப்படி அமைதியாக முறைத்து பார்க்கும் நபராக நடித்தவர் லோகேஷ் பாபு. இவர் பல படங்களில் காமெடியனாகவும், தனியார் காமெடி சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

அண்மையில் இவரின் உடல்நலை மோசமானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டார். பின்னர், இவருடைய சிகிச்சைக்கு உதவி தேவை என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி லோகேஷ் பாபுவை நேரில் சந்தித்து அவரது மருத்துவச் செலவுக்கு நிதியுதவி வழங்கினார். மேலும், சில மணித்துளிகள் அவரிடம் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார். விஜய் சேதுபதியின் இந்த உதவிக்கு, லோகேஷ் பாபுவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.