புது முயற்சியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்! 

vijay sethupathi

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'க/பெ ரணசிங்கம்' நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குனர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Ad

தற்போது, 'க/பெ. ரணசிங்கம்' திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இது திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையாகும். இந்தப் பாணியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ. ரணசிங்கம்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe