பிகில் படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
சிமோகா மத்திய சிறையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட ஷூட்டிங் இந்த மாத இறுதிவரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஜனவரி மாதம் 16ஆம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய லுக்குடன் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதுவரை விஜய் சேதுபதியின் லுக்கை வெளியே தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.
இந்நிலையில் மாஸ்டர் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஒரு காட்சி ஷூட்டிங்கை பார்த்த யாரோ ஒருவரின் மொபைல் கேமராவில் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி ஒரு சந்தில் கெத்தாக நடந்துவருவருகிறார்.