அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்திருக்கிறார்.இது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.
தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.
அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு மாலை ஐந்து மணிக்கு தளபதி 64 படத்திலிருந்து அப்டேட் விட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதில் முதள் நாள் அப்டேட்டாக இன்று விஜய் சேதுபதியும் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.