vijay sethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இக்கூட்டணி ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்தது. இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஃபைனான்ஸ் சிக்கல் காரணமாக இப்படம் இன்றுவரை வெளியாகவில்லை.

Advertisment

அதன் பிறகு, சில ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ‘தர்மதுரை’ என்ற படத்தை சீனு ராமசாமி இயக்கினார். தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர், விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக ‘மாமனிதன்’ என்றபடத்தில் இணைந்தது. இப்படத்தின் அனைத்துப்பணிகளும் நிறைவுபெற்றதையடுத்து, ரிலீசிற்கு தயாராகிவருகிறது.

Advertisment

இந்த நிலையில், விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.