மெல்போர்னில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

vijay sethupathi

Advertisment

இந்த வருட தொடக்கத்தில் பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் திருநங்கையாக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார் விஜய் சேதுபதி. இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கவே வாய்ப்புள்ளது என்று இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டினார்கள்.

Advertisment

இந்நிலையில் இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பலதரப்பு மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தற்போது மெல்பார்னில் நடைபெறும் இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்துகொண்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக் விஜய் சேதுபதி, காயத்ரி, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது விஜய் சேதுபதி ஷாரூக் கானுடன் நின்று புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததற்காக இந்த விழாவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சர்வதேச அளவில் விஜய் சேதுபதி வாங்கும் முதல் விருதாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியை வாழ்த்தி பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.