Advertisment

ஒரே படத்தில் இரண்டு டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் விஜய் சேதுபதி!

கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரௌடிதான். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Advertisment

nayanthara

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த படத்தில் ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இக்கூட்டணிக்கு அமைந்தது.

Advertisment

இந்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்தார் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக இருந்தட்து.

alt="day night" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c222683f-4d45-411d-862a-9d29d4048268" height="203" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Day-Night-article-inside-ad_20.jpg" width="338" />

ஆனால் படம் குறித்து எந்தவித அப்டேட்டும் அடுத்து வரவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாக இருந்த படம் தற்போது அவருக்கு பதிலாக லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Nayanthara samantha Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe