ஆயோக்யா படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் ஆக்‌ஷன். ஹாலிவுட் பாணியில் இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்திருப்பதால் படத்துக்கும் ஆக்‌ஷன் என டைட்டில் வைத்திருப்பதாக சுந்தர்.சி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Advertisment

vijay sethupathi

துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி படமாகியிருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி மற்றும் தமன்னா நடித்துள்ளார். தமன்னா பாகுபலி படத்திற்கு பின் இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

இந்த படம் வெளியான இன்றே விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த சங்கத்தமிழன் படமும் வெளியாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திலுள்ள பிரச்சனைகளால் படம் இன்று வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆக்‌ஷன் படத்தின் தொடக்கத்திலேயே நட்பு ரீதியாக விஜய்சேதுபதி வந்து, ”மக்கள் அனைவருக்கும் புரிதல் காரணமாக படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தமிழில் பேசுகிறார்கள்” என்று அறிவித்துவிட்டு செல்கிறார்.