விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள வியாபாரிகள்...

விஜய் சேதுபதி தற்போது விஜய்யுடன் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கான காட்சிகள் டெல்லியில் நடைபெற இருப்பதாகவும், அங்குதான் விஜய்யும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

vjs

இந்நிலையில் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை சிறு குறு வியாபாரிகள் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு துணைபோவதாக நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

நவம்பர் 04ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் முற்றுகையிடுவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக விஜய் சேதுபதி ஆன்லைன் ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனால் சிறு குறு வியாபாரிகளின் வணிகம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe