Advertisment

சிவாஜி, எம்.ஜி.ஆர். குறித்து மற்ற மொழி நடிகர்களுடன் பகிர்ந்த விஜய்சேதுபதி!

அண்மையில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவர்கொண்டா, ஆலியா பாட், பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட சினிமா ரவுண்டேபிள் பேட்டியில் தமிழக நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார். இதில் சினிமா பற்றியன ஒவ்வொரு நடிகர்களுக்குள் இறுக்கும் புரிதல் குறித்தும், பலவற்றை பற்றியும் பேசிக்கொண்டனர்.

Advertisment

vjs

அதில் தொகுப்பாளர் ஒவ்வொரு நடிகரிடமும் உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “சிவாஜி கணேஷன் சார், அவரமாதிரியான தலைசிறந்த நடிகரை பார்த்ததில்லை. கமல்ஹாசன் சார், அவருடைய பிரில்லியன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். மோஹன் லால் சார், அலட்டிக்கொள்ளாமல் நடிப்பவர். எம்.ஜி.ஆர் சார், அவருடைய படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் மற்றும் அவருடைய திரைக்கதை தேர்வு மிகவும் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Advertisment

அப்போது அருகே இருந்த மனோஜ் பாஜ்பாய், “ஒருநாள் நான் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும்” என்று சொன்னார். தற்போதே இருவரும் லால்சிங் சட்டா என்னும் அமீர்கான் படத்தில் இருவரும் நடிக்கிறார்கள். ஆனால், ஒன்றாக இருவரும் சேர்ந்து நடிப்பதுபோல காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sivaji Ganesan Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe