Advertisment

'அதே புல்லட் அதே ஹெல்மெட்' - பிரபல நடிகரை ஒப்பிட்டு விஜய் சேதுபதி போஸ்டரை கிண்டலடிக்கும் ரசிகர்கள்

vijay sethupathy 46th film first look poster released

விஜய் சேதுபதி தற்போதுவெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் நடிக்கிறார். மேலும் முதன்மைக் கதாபாத்திரம், முக்கியக் கதாபாத்திரம், வில்லனாகஎனப் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தியில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், 'மும்பைகார்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் 46வது படத்தை இயக்குநர் பொன் ராம் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'டிஎஸ்பி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார். இசைப் பணிகளை இமான் மேற்கொள்கிறார்.

Advertisment

இந்த போஸ்டரை பார்க்கையில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜு' படத்தின் போஸ்டர் போல் உள்ளது எனவும் நிவின் பாலி போஸ்டரை ஒப்பிட்டு 'அதே புல்லட் அதே ஹெல்மெட்' எனவும் கிண்டலடித்துப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

actor vijay sethupathi karthick subburaj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe