(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் சேதுபதி நடிப்பில் ஜூங்கா, செக்க சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ், ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் இவர் தற்போது சீதக்காத, சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்த் படம், மணிகண்டனின் 'கடைசி விவசாயி' படம், மற்றும் அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துவங்கி படமாகி வந்த நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் மலேசியா செல்லவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் நாயகியாக அஞ்சலி மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவருடைய மகன் சூர்யாவும் நடிப்பதாக கூறப்படுகிறது.