vijay sethupathy's 'Mamanithan' movie praised by political leaders

Advertisment

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்கள் ஷங்கர், ரஜினிகாந்த், பாரதிராஜா மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் 'மாமனிதன்' படத்தின் சிறப்புக்காட்சியில் இடதுசாரி தலைவர்கள், தமிழக காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திரைத்துறையினர், ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். அதோடு வருகிற 15-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு பாராட்டுக்களும் தெரிவித்துள்ளனர். இதனை சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.