Vijay Sethupathi's 'Maharaja' movie set a new box office record!

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம், திரையரங்குகளில் ஓடி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகுறித்துபேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, இப்படத்தில்எடிட்டிங்பணிகளைச்செய்தபிலோமின்ராஜை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்தத் திரைப்படம் ரூ.20 கோடிபட்ஜெட்டில்உருவானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி 18நாட்களைக்கடந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைவசூலித்துள்ளதாகப்படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் ரூ.100 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment