/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-3_28.jpg)
சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ஆர்.கே சுரேஷின் 'ஸ்டூடியோ 9' நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்நிலையில் 'மாமனிதன்' படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 23-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 24-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது இப்படம் ஒரு நாள் முன்னதகாவே வெளியாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)