/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadaisi.jpg)
'காக்கா முட்டை'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இப்படம் வெளியாகி தேசிய விருது பெற்றதோடுஉலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் மணிகண்டனுக்கு பெருமை சேர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, விஜய் சேதுபதி -மணிகண்டன் கூட்டணியில் 'கடைசி விவசாயி' என்ற படம் உருவாகிவருகிறது. இதில், யோகிபாபு, பசுபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாககூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் ட்ரைலர்ரிலீஸ் குறித்தஅறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரைலர் நாளை (21.11.2021) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)