Advertisment

vijay sethupathi's kadaisi vivasayi movie trailer goes viral

'காக்கா முட்டை'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இப்படம் வெளியாகி தேசிய விருது பெற்றதோடு, உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் மணிகண்டனுக்கு பெருமை சேர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இதையடுத்து, விஜய் சேதுபதி -மணிகண்டன் கூட்டணியில் 'கடைசி விவசாயி' என்ற படம் உருவாகிவருகிறது. இதில், யோகிபாபு, பசுபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழுஇறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில், ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளின்வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும்பேசப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர், தற்போது சமூக வலைதளங்களில்ட்ரெண்டாகிவருகிறது.மேலும், யூடியூப் தளத்தில் 8 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.