விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று(05.07.2025) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. படம் தொடர்பாக சூர்யா சேதுபதி பேசியதாக சில விஷயங்கள் விமர்சனத்துக்கு உள்ளானது.
படம் வெளியான முதல் நாளில் விஜய் சேதுபதி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். அவருடன் சூர்யா சேதுபதியும் சென்றிருந்தார். பின்பு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் சேதுபதியிடம், சூர்யா சேதுபதி பேசிய வீடியோக்களை நீக்கச் சொல்லி தகவல்கள் வருவதாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “தெரியாமல் நடந்திருக்கும், மன்னித்துவிடுங்கள்” என்றிருந்தார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக பட ப்ரொமோஷனில் ஈடுபட்ட அவர், அண்மையில் பபுள்கம் சாப்பிட்டபடியே ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் போது போஸ் கொடுத்திருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய சூர்யா சேதுபதி, “நான் வேண்டுமென்று அப்படி பண்ணவில்லை. அது யாருக்காவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/05/459-2025-07-05-17-51-55.jpg)