விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு, விஜய் சேதுபதி திரைக்கதை எழுதியுள்ளார்.

Advertisment

விஜய்

நடிகர் விக்ராந்திதை வைத்து அவருடைய சகோதரர் சஞ்சீவ் கடந்த 2015ஆம் ஆண்டு தாக்க தாக்க என்றொரு படத்தை இயக்கியிருந்தார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க முயற்சி செய்தனர். அதற்கு விஜய் சேதுபதிதான் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து வேறொரு படத்தை இயக்குகிறார் சஞ்சீவ். இந்தப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படங்களுக்கு ஏற்கெனவே விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இது விஷ்ணு விஷாலின் 18ஆது படமாகும். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் நேற்றுதான் வெளியானது.