சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும், சர்வதேசத்திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது.
இந்நிலையில்,இப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது. ஈரான் நாட்டில் உள்ள அபதான் தீவில் 15 வருடங்களாகநடைபெற்று வரும் 'மூவிங் திரைப்படத் திருவிழாவில்’ சிறந்த படங்கள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது மாமனிதன்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.