
காலா, 2.0 படங்களை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடிப்பாரா அல்லது முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா குழப்பம் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் அதற்கான விடையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, ரஜினி நாயகனாக நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் அவரது கோடானகோடி சினிமா ரசிகர்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக தகவல்களும் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணையவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ரஜினியின் தம்பி அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், அதற்காக அவர் கதை கூட கேட்காமல் ஒரு மாதம் இப்படத்திற்காக தான் கால் ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக படத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.