vijay sethupathi will be host bigboss season 8

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ், இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. இதன் அடுத்த சீசனான 8வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சூழலில் சீசன் 1 முதல் கடைசி சீசன் வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தார். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக விலகியதாகச் சொன்ன கமல், கனத்தை இதயத்துடன் இதை அறிவிப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கமலின் அறிவிப்பு பிக் பாஸ் ரசிகர்களை சோகப்படுத்திய நிலையில் தற்போது அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி இருந்து வந்தது. இதுவரை கமலைத் தவிர்த்து சிம்பு, ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் சில எபிசோடுகளை தொகுத்து வழங்கினார்கள். அதனால் சிம்பு, வரவிருக்கும் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது. பின்பு சரத்குமார் அல்லது விஜய் சேதுபதி வழங்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் விஜய் சேதுபதி இடம் பெற்றுள்ளார். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி இதற்கு முன்பாக தனியார் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விடுதலை பாகம் 2, ட்ரெயின் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.