Skip to main content

சூரி கடைக்கு சர்ப்ரைஸ் விசிட்... ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி ...

Published on 04/11/2019 | Edited on 05/11/2019

நகைச்சுவை நடிகர் சூரி கடந்த 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் திறந்து வைத்தார். இந்த உணவகத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நடிகர் சூரி மேலும், இரண்டு புதிய உணவக கிளைகளை மதுரையில் திறந்துள்ளார்.
 

vijay sethupathi with soori

 

 

“அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்ற இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை சூரியின் நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 1ஆம் தேதி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். 

 

Bharathiraja and Ilayaraja meet



மேலும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்ட உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அன்றிரவே நடிகர் விஜய் சேதுபதியும் சூரியின் கடைக்கு வந்து சூரியை ஆச்சரியப்படுத்தினார். அப்போது அந்த கடைக்கு வந்த ரசிகர்களிடம் மொபைலை வாங்கி தானே செல்பி எடுத்தார். ஒரு ரசிகர் தன் உறவினருடன் விடியோ காலில் பேசுங்கள் என்று ஆசையாகக் கேட்கவே, அவரின் ஆசையையும் நிறைவேற்றினார். சூரிக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இரவு உணவையும் அங்கேயே சாப்பிட்டார் விஜய் சேதுபதி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.  

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார்.