Advertisment

விஜய் சேதுபதிக்கு சிலை வைத்த படக்குழு....

vijay sethupathi

Advertisment

விஜய் சேதுபதி நடிக்கும் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்னும் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். சீதக்காதி படத்தில் 75 வயது முதியவரான அய்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதுவரை படத்தின் ப்ரோமோஷனுக்காக இரண்டு பாடல்களும், டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தை விளம்பர படுத்த படக்குழு சூப்பர் முறையை கையாண்டுள்ளது. வெளிநாடுகளில் மிகவும் பிரபலமடைந்தவர்களுக்கு மெழுகு சிலை மியூசியங்களில் மெழுகு சிலை வைப்பார்கள். அது போன்று இந்த படத்தில் வரும் அய்யா கதாபாத்திரத்தின் மெழுகுச் சிலையை எக்ஸ்பிரஸ் மாலில் வைத்துள்ளனர். அச்சு அசலாக அய்யா கதாபாத்திரத்தை போலவே இருப்பதால் ரசிகர்கள் விரும்பி அங்கு வந்து புகைப்படம் எடுத்துகொள்கின்றனர். இந்த சிலையை பிரபல இயக்குனரும், சீதகாதி படத்தில் நடித்திருக்கும் மஹேந்திரன் திறந்துவைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe