Advertisment

கார்த்தி படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி

vijay sethupathi walked out karthi movie

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத்தில் 'விருமன்' ஆகிய படங்களில்நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர்மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன்இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிநடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். விஜய் சேதுபதி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட்பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்குஅதிக முக்கியத்துவம் இருப்பதால், அதற்கு ஏற்ற நடிகரை தேர்வு செய்யும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

raju murugan actor vijay sethupathi actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe